சென்னை,

மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.5 ரிக்டரில் பதிவாகியுள்ளது. அது தொடரும் என டிடிவி ஆதரவு நாஞ்சில் சம்பத் கிண்டலடித்துள்ளார்.

ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்பி., இரு அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகியும் மனங்கள் இணையவில்லை என சூசகமாக தனது டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது இணைந்த அதிமுக அணிகளிடையே சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத், மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,  வரும் 28ம் தேதி வேலூர், சேலம், திருச்சி மண்டலங்களில் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்றும்,  நமது எம்.ஜி.ஆர் பத்ரிகையை கைப்பற்றுவோம் என பழனிசாமி அணியினர் அறிவித்தனர். அவர்கள் பற்றி செய்தி போட ஆள் இல்லாததால் தற்போது வக்ரபுத்தியை காட்டுவதாகவும் கூறினார்.

[youtube-feed feed=1]