மியாசகி, ஜப்பான்

ஜப்பான் நாட்டில் உள்ள கியுஷா தீவில் 6.3 ரிக்ட்ர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் தீவுகளில் கியுஷா என்னும் தீவும் ஒன்றாகும். இங்கு மியாசகி என்னும் பெரிய நகரம் அமைந்துள்ளது. இந்த மியாசகி நகரை மையமாக கொண்டு இன்று காலை கியுஷா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் வேகமாக குலுங்கின. அச்சமடைந்த மக்கள் தெருவுக்கு ஓடி வந்துள்ளனர். இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதம் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வரவில்லை. இந்த நிலநடுக்கத்தை முன்னிட்டு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.