மரணத்துக்கு சில மணி முன்பு மணம் புரிந்த அமெரிக்க வாலிபர்

Must read

டெஸ் மொயினஸ், லோவா

மெரிக்காவில் உல்ள லோவா மாநிலத்தில் ஒரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது மரணத்துக்கு முன்பு காதலியை மணம் புரிந்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் லோவாவும் ஒன்றாகும். இந்த மாநிலத்தின் தலைநகர் டெல் மொயினஸ் ஆகும். இந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர் டிரிஸ்டன் லவே என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்  ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். அத்துடன் வடக்கு லோவா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும் படித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கல்லீரலில் புற்று நோய் உள்ளதாக கூறினார்கள. அத்துடன் அந்த நோய் முற்றிய நிலையில் உள்ளதால் டிரிஸ்டன் விரைவில் மரணம் அடைந்து விடுவார் எனவும் தெரிவித்தனர்.

டிரிஸ்டனின் காதலியின் பெயர் டியானா.

நோயாளியாக இருந்தாலும் தனது காதலைனையே டியானா மணக்க விரும்பினார். அதற்கு டிரிஸ்டன் ஒப்புதல் அளிக்கவே கடந்த சனிக்கிழமை இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த 48 மணி நேரத்தில் டிரிஸ்டன் மரணம் அடைந்துள்ளார். இதனால் டியானா கடும் துக்கம் அடைந்தாலும் இந்த குறுகிய கால மணவாழ்வு தமக்கு முழு திருப்தி அளித்ததாக தெரிவித்துள்ளார்.

டியானா, “அவர் எனக்கு காதலர் மட்டுமின்றி ஒரு தாயைப் போலவும் இந்த இரு தினங்களில் என்னை கவனித்துக் கொண்டார். என்னிடம் இந்த குறுகிய கால மணவாழ்வில் என்ன கிடைத்திருக்கும் என கேட்கின்றனர். எனக்கு இந்த மணவாழ்வில் பல்லாயிரம் ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மன நிம்மதி கிடைத்துள்ளது. இது வேறு யாருக்கும் கிடைக்காது” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article