பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தாங்கள் செய்யப்போகின்ற பணிகளைப் பற்றி அறிவித்து  வரப்போகும் பொருளின் மேல் பெரும்  பெரிய எதிர்பார்ப்பினை கூட்டுவார்கள்.

சமீபத்தில்தான் பேஸ்புக் நிறுவனத்தின் மாநாடு நடைபெற்றது அதில் தனி உரிமை சார்ந்த கொள்கை முடிவுகளுக்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுக்கும் என்று அறிவித்தனர். ஏனெனில் அந்த அளவுக்கு தனி உரிமையில் அவர்களுக்கு பலத்த அடி, அதை சமாளிக்க அவர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

ஆனால் கூகிள் நிறுவனம் அப்படியல்ல, சொல்லப்போனால் கூகிள் செய்வதைத்தான் பேஸ்புக் நிறுவனமும் பின்பற்றுகிறது ஆனால் அடியென்னவோ நம்ம வடிவேல் போல் பேஸ்புக் நிறுவனத்திற்கு , சரி

கூகிள் ஐஓ 2019 ல் அப்படியென்ன புதிய எதிர்பார்ப்புகள்

மிக குறைந்த விலையில் THE PIXEL 3A AND 3A  போன்கள் இந்திய மதிப்புக்கு விலை  அதிகமான பிக்சல் போன்களை தற்போது கூகிள் நிறுவன் எல்லாருக்கும் ஏற்றவாறு குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 399 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் குறைந்தது  28,000 (இன்றைய டாலர் மதிப்பில்)

தரமான கேமிர, இரவிலும் படம் எடுக்கு உதவும் வசதி, வாட்டர்புரூப், வயர்லஸ் சார்ஜிங்  மற்றும் இலவச கூகிள் போட்டோ சேமிப்பக இடம் போன்றவை இதன் சிறப்பம்சம்

NEST HUB MAX IS A பல்லூடக கருவி

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று தலைவர் பாடிய பாடல் இன்று உண்மையாகிவிட்டது, நீங்கள் குரலில் கட்டளையிட்டாலே நீங்கள் சொன்ன பணியை செய்யும் கூகிள் ஹோம் ஹப் தான் இப்போது கூகிள் நெஸ்ட் ஹப், கூகிள் ஹோம் உங்கள் குரலில் இயங்கும் தனி செயலியாகும்.

கூகிள் ஹோம் ஏன் நெஸ்ட் ஆகிவிட்டது

கூகிள் நிறுவனம் சிறய அளவிலான பாதுகாப்பு கேமிராக்களை உருவாக்கியுள்ளது, அதனுடன் பாட்டு கேட்கலாம், திருடர்கள்வ ந்தால் எச்சிரிக்கை ஒலியை ஓலிக்கவைக்கவும் உதவும் கருவியையும் உருவாக்கியுள்ளது.

இப்படி கருவிகளை பெருக்கிக்கொண்டே போனால் என்னாவது, ஒவ்வொரு மனிதனைச் சுற்றி எவ்வளவு கருவிதான்இருக்க முடியும். அதனால் கூகிள் நிறுவனம் பாதுகாப்பு கேமிரா, கூகிள் ஹோம், பாட்டுக்கருவி, பெரிய திரை இதையெல்லாம் ஒன்றாக்கி நெஸ்ட் ஆக வெளியிட்டுள்ளது

ANDROID Q BETA 3 DROPS: DARK THEME, A NEW DIGITAL WELLBEING MODE, SMART REPLY

போன் தயாரிப்பில் எல்லா நிறுவனங்களும் கையில் எடுக்கும் ஆயுதம் இப்போது  DIGITAL WELLBEING எனப்படும் மின்நலம்தான். ஆப்பிள் நிறுவனம் மின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, ஆன்டிராய்டு நிறுவனமும் மின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, மின்நலம் என்றால் உங்கள் போனுக்கு குறைந்த மின்செலவு ஆகுமா என்று அப்பாவியாய நினைக்காதீர்கள் மின்நலம் என்பது உங்கள் செல்பேசியில் நீங்கள் எந்த செயலியை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதைக்காட்டி அதை உங்களிடம் இருந்து சற்றே பிரித்து வைப்பது, இதனால் மூஞ்சி புக் அதாங்க பேஸ்புக் நிறுவனத்திற்குத்தான் அடி விழும் என்று பேசிக்கொள் கிறார்கள். கூடவே கருப்பு வண்ணம் எப்போதும் அதிக மின்சாரத்தினை எடுக்காது என்பதால் இவர்களும் கருப்பு கலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

நிகழ்நேர வசனங்கள்  காணொளி – LIVE SUBTITLES

நீங்கள் உங்கள் செல்பேசியில் ஒரு காணொளியை பார்த்தால் அதில் பேசப்படும் வசனங்கள் உங்கள் திரையில் காட்டப்படும். ஆங்கிலப்படத்திற்கு சில படங்களில்   SUBTITLES காட்டப்படுமே அதுபோல்தான்  நீங்கள் உங்கள் செயலியிலோ அல்லது தளத்திலோ காணொளிகளை பார்த்துக்கொண்டிருந்தால் வசனங்கள் திரையில் காட்டப்படும் வசதியை கூகிள் கொண்டுவரஉள்ளது

இப்படி இன்னமும் பல வசதிகள் கொண்டுவரப்பட உள்ளன. இன்று கடைசி நாள் நிகழ்வு காத்திருப்போம் இன்று என்ன புதியதாக கொண்டுவரப்போகிறார்கள் என்று…

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதள இணைப்பு கிளிக் செய்து பாருங்கள்….

#Google_i/o_2019

-செல்வமுரளி