த்ராசலம்

தேசிய ஊரடங்கு உள்ள நேரத்தில் தெலுங்கானா அமைச்சர்கள் பத்ராசலம் ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடி உள்ளனர்.

நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி மத்திய அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அறிவித்துள்ளது.   இதனால் பலரும் கூடுவதைத் தவிர்க்கத் திருப்பதி உள்ளிட்ட பல கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.   அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் டில்லி நிஜாமுதினில் நடந்த தப்லிகி ஜமாத் நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களில் 9 பேர் தெலுங்கானா வந்ததால் இவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி மாநிலத்தில் தேசிய ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெலுங்கானா அரசு அறிவித்தது.

இன்று ஸ்ரீராம நவமி தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பத்ராசலம் நகரில் உள்ள ஸ்ரீசீதாராமச்சந்திர சாமி கோவிலுக்குத் தெலுங்கானா மாநில அமைச்சர்கள் அல்லோலா இந்திராகரன் ரெட்டி மற்றும் புவ்வாடா அஜய்குமார் ஆகியோர் வந்துள்ளனர்.  அங்கு நடந்த ஸ்ரீராமவமி விழாவில் இவர்களுடன் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்,

தேசிய ஊரடங்கு வேளையில் அமைச்சர்களின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.