சென்னை

டைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.   உச்சநீதிமன்ற உத்தரவின்படி தற்போது அவற்றுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.   தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.  அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலையொட்டி மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கூடுதல் காவலர்கள் நியமனம், சோதனை சாவடிகள் அமைப்பு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 39,408 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  அக்டோபர் 6 ஆம்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியூர் பிரமுகர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.