காட்பாடி தொகுதியை எட்டாவது முறையாக வென்றுள்ளார் திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் மூத்த அரசியல்வாதி துரைமுருகன். இவர் வெறும் 758 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுகவின் ராமுவை வென்றுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில், ஏற்கனவே 7முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அமைச்சர் கனவுடன் 8வது முறையும் களம் கண்டார்.

ஆனால், கஷ்ட காலங்களிலேயே எளிதாக வென்ற துரைமுருகனுக்கு இந்தமுறை நிலைமை நன்றாக இல்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இழுபறி ஏற்பட்டது. பலமுறை பின்னடைவை சந்தித்தார் துரைமுருகன்.

ஆனால், இறுதியாக 758 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில், தொகுதியை 8வது முறையாக கைப்பற்றிவிட்டார் துரைமுருகன்.