சென்னை:

கடும் தண்ணீர் பிரச்சினை காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.


சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனையடுத்து, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன.

இந்தப் பள்ளிகள் சனிக்கிழமைதோறும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், இந்த பிரச்சினை பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன.