குருகிராம்

ரியானா மாநிலத்தில் பதட்டம் தொடர்வதால் பல இடங்களில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ளக் கலவரம் மூண்டது. உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கிடைக்க காவல்துறையினர்  அங்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர்  தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் காவல்துறையினர் சுட்டனர். அரசாங்கம், தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தனை நடவடிக்கைகளையும் மீறி அரியானா மாநிலத்தில் பல இடங்களில் பதட்டம் தொடர்ந்து வருகிறது.  எனவே அரியானா அரசு நூஹ். ஃபரிதாபாத்,, பல்வால் உள்ளிட்ட மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளை ஆகஸ்ட் 5 வரை தடை செய்துள்ளது.  இதே தடை சோனா, பட்டோடி மற்றும் மனேசார், ஆகிய குருகிராம் மாவட்ட பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.