கமதாபாத்

ந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் அங்கு நவராத்திரி விழா நடப்பதால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்றும், அதனால் போட்டியை வேறு நாளுக்கு மாற்ற வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனவே போட்டியை வேறு நாளுக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி ஒரு நாள் முன்பாக அதாவது அக்டோபர் 14-ந்தேதி அதே இடத்தில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற உள்ளது. மேலும் அக்டோபர் 12-ந்தேதி ஐதராபாத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான்-இலங்கை ஆட்டம் 10-ந்தேதிக்கு மாற்றப்படுகிறது.

ஓரிரு நாட்களில் திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட உள்ளது.