பராமரிப்பு காரணமாக நாளை சென்னையில் சில பகுதிகளில் மின் தடை

Must read

சென்னை

நாளை பராமரிப்பு பணிகள் காரணமாகச் சென்னையில் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

நாளை தமிழக மின் வாரியம் சென்னையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடத்த உள்ளது.   அதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை பின் வருமாறு :

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் அண்ணா மெயின் ரோடு, ஓம் சக்தி நகர், சத்யா நகர், ராகவா நகர், கோவிலம்பாக்கம், லோகநாதன், குறிஞ்சி நகர், எம்.ஜி.ஆர் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, முத்தையா நகர், அம்பேத்கர் சாலை வரதாபுரம் கைலாஷ் நகர், அந்தோனி நகர், பஜனை கோயில் தெரு, நூக்கம்பாளையம், நேசமணி நகர், அம்பேத்கர் தெரு கடப்பேரி ரயில் நகர், அற்புதம் நகர், அம்மன் நகர், பர்மா காலனி ராதா நகர் ஜி.எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு பகுதி; அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, ருக்குமணி நகர், பீச் ரோடு, பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியசார்பாடி பகுதி; எம்.சி ரோடு, ஆதாம் தெரு, பி.சி பிரஷ் ரோடு, பிச்சான்டி லேன், மேற்கு மாதா தெரு, மரியதாஸ் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அரும்பாக்கம் பகுதி ; ஸ்ரீனிவாசா நகர், சீமாத்தமன் நகர், நெற்குன்றம் பகுதி, கிருஷ்ணா நகர், காமராஜ் தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பராமரிப்பு பணிகள் மதியம் 2 மணிக்குள் முடிவடைந்தால் உடனே மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article