சென்னை

னமழையால் சென்னையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை கடுமையாக வலுத்து வருகிறது.  அவ்வகையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.  மாநிலத்தில் பல இடங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து  பாதிப்பால் சென்னை நகரில் உள்ள கோயம்பேடு அங்காடிக்குக் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்துள்ளது.   இதனால் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் கோயம்பேடு அங்காடியில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து மக்களைப் பாதித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கோயம்பேடு அங்காடியில் தக்காளி கிலோ ரூ.80, அவரைக்காய் கிலோ ரூ.80, கேரட் கிலோ ரூ.70. பீன்ஸ் ரூ.80 என விற்கப்படுகிறது.   தற்போது மழை குறைந்துள்ளதால் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் விலை குறைய வாய்ப்புள்ளது எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.

[youtube-feed feed=1]