பாட்னா:

மூன்று நாட்களா பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் பீகாரில் கனமழை பெய்யும் என ரெட் அலார்ட் விடுத்திருந்தது. அந்த  கணிப்பின் படியே மூன்று நாட்களாக த்டர்ந்து கனமழை  பெய்து வருகிறது.     இதனால் பீகார் மாநில தலை நகர் பாட்னாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது,  கடும் வெள்ளம் காரணமாக பாட்னா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நகரச் சாலைகளில் வெள்ளம் போல்  தேங்கி நிற்கும் மழையின் காரணமாகக் குளத்தில் நீந்திச் செல்வதைப் போல் வாகன ஓட்டிகள் சென்று  பெரும சிரமத்தைச் சந்தித்து  வருகின்றனர்.     மாநிலம் எங்கும் ஏற்கனவே கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாட்னா தவித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாள்களுக்கும் பாட்னாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளத்தில்  சிக்கிக் கொண்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் மழை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.   இந்த மழை மற்றும் வெள்ளத்தினால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.   சுமார் 18 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.