டில்லி

டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் கடந்த சில தினங்களாகத் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில்  உயர்ந்து வருகிறது.  சென்ற 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,194- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 4.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,156- பேர் குணம் அடைந்துள்ளனர்.   சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,397- ஆக உயர்ந்துள்ளது.

இதையொட்டி டில்லியில் பல கட்டுப்பாடு நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.   அவ்வகையில் உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுகிறது.  மாறாக அடுத்த 2 வாரங்களுக்குக் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.