ஸ்ரீவில்லிப்புத்தூர்

சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் மக்கள் கூட்டம் கூடமாக வருவது வழக்கமாகும்.  நான்குபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இது சதுரகிரி என்னும் பெயர் பெற்றுள்ளது.

இந்த மலைக் கோவிலில் சிவன் சாய்ந்த நிலையில் உள்ளது தனிச் சிறப்பாகும்.  கொரோனா பரவல் காரணமாக இங்குப் பக்தர்கள் வந்து வழிபாடு செய்யத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.  தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாட்டுடன் திறக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களையொட்டி சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்குப் பக்தர்கள் வந்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பக்தர்கள் வந்து வழிபடலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.