சென்னை
வரும் 21 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

போக்கிரி திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கலன்று விஜய் நடிப்பில் வெளியானது. இதில் நடிகர் வடிவேலு, அசின், நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. வரும் 21-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலிஸ் ஆகிறது. விஜய்யின் மற்றொரு ஹிட் படமான துப்பாக்கியும் அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கான 4கே டிசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் 50 வது பிறந்தநாள் வருகிற 22ம் தேதி வருவதால் அவரது ரசிகர்களும், கட்சியினரும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்ஹில் ஒரு பகுதியாகவே அவர் நடித்த போக்கிரி மற்றும் துப்பாக்கி திரைப்படம் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
[youtube-feed feed=1]