சென்னை: 

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்னுப்பிரியா வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று கூறி வழக்கை முடி உள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சிபிஐ வழக்கை முடித்துகொள்வதாக கூறியது. ஆனால், அதற்கு விஷ்ணுபிரியாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 24ந்தேதிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 7ந்தேதி, விஷ்ணுப்பிரியா தற்கொலைதான் செய்துகொண்டார் என்றும், வழக்கை கைவிடுவதாகவும் சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐயின் முடிவுக்கு விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி  கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்  நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வருகின்ற 24 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.