சேலம் :

ற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்து மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

அசோக் குமார் (51) என்பவர் ஏற்காடு எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக ஈரோட்டில் ரயில் ஏற டிக்கெட் முன்பதிவு  செய்திருந்தார்.  ஆனால் அவர் மது அருந்திவிட்டு  ரயில் வர தாமதமான தால் ரயிலை தவறவிட்டுவிட்டார். ஆகவே அடுத்த நிலையமான சேலத்தில் ரயிலை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரயில்வே காவல்துறைக்கு போன் செய்து ரயிலின் எஸ் 10 பெட்டியில் பாம் இருப்பதாக கூறினார். .

இந்த மிரட்டலை அடுத்து  ரயில் சேலம் ஜங்ஷனில் ஏற்காடு எக்ஸ்பிரஸில் எல்லா பெட்டியையும் காவல்துறை மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் சோதனையிட்டனர். இதனால் 55 நிமிடம் ரயில் தாமதமானது. தீவிர சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அசோக் குமார் என்பதை காவல்துறையினர்  கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தியதில் பாரில் குடித்துக்கொண்டு இருந்ததால் தாமதமாகிவிட்டது.  ஆகவே ரயிலை தவறவிட்டுவிட்டேன். அதனால் அடுத்த ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க மிரட்டல் விடுத்தேன் என்று  கூறியுள்ளார்.