சென்னை,

மிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வாகன ஓட்டிகள், வாகன சோதனையின்போது,அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும், அதற்கு ஏதுவாக அசல் உரிமைத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், வீதிகள் மீறினால் ஓட்டுநகர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், வீதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள், ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக அல்லது  நிரந்தரமாக ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும், வண்டியின்  பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், வேகமாக  வண்டியை ஓட்டினால், அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக/நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுபோல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது, வாகனத்தை ஓட்டிச்சென்றாலோ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.