சென்னை:
தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக குஜராத்தில் இருக்கிற முந்த்ரா துறைமுகம்தான் இதில் நம்பர் ஒன். அங்குதான் அதிகமாக கடத்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவைகளை எல்லாம் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]