சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும்  தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு. தற்போது,  போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நண்பரான,  புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன்  விசாரணைக்கு ஆஜராகுமாறு   நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதை பொருள் கடத்தல் விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், திமுகவின் முன்னாள் வெளிநாடு அமைப்பு பிரதிநிதியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரது தலைமையிலான கும்பல் வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்த முயன்றபோது, டெல்லியில்,   மூன்று பேர் கும்பலை டெல்லியில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் இதற்கு தலைவனாக செயல்பட்டவர் என்பதை கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த அவரது கூட்டாளி சதா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட இயக்குனர் அமீரையும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை செய்தனர். அதைத்தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறை சார்பில் அமீர் வீடு அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 9ந்தேதி அன்று  அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி புதுவையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன் என்பவருக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எதிர்வரும் 14 மற்றும் 15 ம் தேதிகளில் டெல்லியில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பிரமுகர் ஈரம் ராஜேந்திரன், ஈரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகறதர். இவர்கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் காங்கிரஸில் இணைந்த நிலையில், இவருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் உள்ள தொடர்பு மற்றும் பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்கப்பட உள்ளது.