சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக  40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது.  இதுமட்டுமின்றி, போதை மாத்திரைகள், கஞ்சா, மெத்தம்பெட்டமைன்  போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் பட்டிதொட்டியெங்கும் காணப்படுகிறது. பெரும்பானலா பெட்டிகடைகளில் போதை பொருள் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. இதன்பின்னணியில் அரசியல் கட்சியினர் இருந்து வருவதால், பொதுமக்கள் இதுதொடர்பான புகார்களை தெரிவிக்க மறுத்து வருகின்றனர். அதேவேளையில்  பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையேயும் போதை பொருள் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதன்படி, ‘போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், இதன் பின்னணியில் இருப்போரை வேட்டையாடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் போதை பொருள் நடமாட்டம் வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் உணவுப்பொருட்கள் வழியாக போதைப்பொருட்கள் கடந்த 3 ஆண்டுகளாக  உலக நாடுகளுக்கு கடத்தி வந்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி வரும், டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், தமிழ்நாட்டில் இருந்தே பல நாடுகளுக்கு போதை பொருள் கடத்தல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜாபர் தம்பியை காவல்துறை தேடி வருகிற்து.

இந்த நிலையில்,  சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்ற 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவித்து உள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 23 வழக்குகளை போலீஸ் பதிவுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, 52 கிராம் மெத்தாம்பெட்டமின், 1961 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.30,000 பணம், 13 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் திமுக நிர்வாகி: சென்னை அழைத்து வரப்பட்டார் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்….