சென்னை:
ஓட்டுனர் உரிமம் காலாவதியானால், அதை புதுப்பிக்கும் கால அவசகாம் ஏற்கனவே 5 ஆண்டுகள் இருந்த நிலையில், அதை ஓராண்டாக குறைத்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார், ஜீப் மற்றும் கனரக வாகன ஓட்டுநகர்கள், வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமமானது வயதை அடிப்படையாக கொண்டு முதல்தடவை 20 ஆண்டு காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு 5 ஆண்டும் ஒட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 5 ஆண்டு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதை ஓராண்டாக குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில், காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கால அவகாசத்தை 5 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாக குறைத்து அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த முறை தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, இனி காலாவதியாகும் ஓட்டுனர் உரிமத்தை ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிக்க தவறும்பட்சத்தில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]