சென்னை: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களின் முதல் தொகுப்பு 2024க்குள் சென்னைக்கு வரும் என தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், அதில் 3 பெட்டிகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட சேவை வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில், மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 118.9 கி.மீ.க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  தற்போது, நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ  ரயில்கள் கட்டம் 1 வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. 2ம் கட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் பின்னர் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 2026-ம் ஆண்டு பூந்தமல்லி-பவர் ஹவுஸ் இடையே இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள் முதன்முதலில் இயக்கப்படும் என்றும் 3 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள்  சென்னைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  செய்தியளார்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின்,  மெட்ரோ ரயில் ஸ்ரீ சிட்டியில் இருந்து சென்னை வந்ததும், ரயில் பராமரிப்பு மற்றும் சோதனை நோக்கங்களுக்காக கட்டப்பட்டு வரும் பூந்தமல்லியில் உள்ள டெப்போவிற்கு கொண்டு செல்லப்படும். பெட்டிகள் தனித்தனியாக வரும் என்றும் அவை ரயிலாக இணைக்கப்பட வேண்டும். பின்னர், தொடர் நிலையான மற்றும் சோதனைகள் மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இழுவை சோதனை, பிரேக் சிஸ்டம், ரயில் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை அமைப்பு, பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் ரயிலின் பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும்.

பூந்தமல்லியில் உள்ள டிப்போவுக்குள் கட்டப்பட்டுள்ள தண்டவாளத்தில் முதலில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சிக்னலிங் அமைப்பு வழங்கப்பட்ட பிறகு, அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ரயில்கள் மீண்டும் சோதிக்கப்படும். இது குறைந்தது 10 அல்லது 12 மாதங்களுக்கு தொடரும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில்களின் முதல் கட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் 2ம் கட்டத்தில் இயக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயில்கள் வடிவமைப்பு, கட்டுப்பாடு மற்றும் சிக்னலிங் அமைப்புகள் வித்தியாசமாக இருப்பதால்  இயக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2ம் கட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாத ரயில்களின் நிறம் மற்றும் தோற்றம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பூந்தமல்லி-பவர் ஹவுஸ் வழித்தடமானது  26.1 கி.மீ தூரம் செல்கிறது, மேலும் இந்த பாதையில் 26 டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க CMRL முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஏற்கனவே டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  37 கிமீ நீளமுள்ள ‘மெஜந்தா’ பாதையில் டிரைவர் இல்லாமல் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவர் இல்லாத மெட்ரோ என்றால் என்ன?

மெட்ரோ ரயிலின் கட்டுப்பாடுகள், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த பொறியாளர்களால் ரிமோட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இவை முற்றிலும் தானியங்கி இயக்கி இல்லாத ரயில் இயக்கங்கள்.

பணியாளர்கள் கிடைப்பதைச் சார்ந்திருப்பது குறையும். டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) கூறுகையில், ஓட்டுநர் இல்லாத ரயில் செயல்பாடுகள் மிகவும் நெகிழ்வானதாக இருக்கும், மேலும் சேவையில் உள்ள ரயில்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப, பணியாளர்கள் கிடைப்பதைச் சார்ந்து இல்லாமல் மாறும் வகையில் ஒழுங்குபடுத்த முடியும் என்று கூறுகிறது. இந்த ரயில்கள் தொடர்பாடல் அடிப்படையிலான ரயில் கட்டுப்பாடு (சிக்னலிங்) அமைப்பில் இயங்குவதால், அதிக சுமந்து செல்லும் திறனை வழங்க 90 வினாடிகள் இடைவெளியில் இயக்க முடியும் என்று DMRC கூறுகிறது.