சென்னை
சென்னையில் செப்டம்பர் வரை வழங்கும் அளவுக்கே குடிநீர் உள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர குடிநீர் வழங்கும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சத்யபிரபா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர், “சென்னை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 850 எம் எல் டி குடிநீர் தேவைப்படுகிறது. போதிய நீர் இல்லாததால் தற்போது 650 எம் எல் டி நீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
சென்னைகாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து 375 எம் எல் டி நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 எம் எல் டி நீர், வீராணம் திட்டம் மூலம் 48 எம் எல் டி நீர் மற்ற்ம் நிலத்தடி நீர் மூலம் 22 எம் எல் டி நீர் கிடைத்து வருகிறது. இதைக் கொண்டு வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.