சென்னை:  எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், கல்வியிலும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடும் இதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அரசு சிறப்பு பள்ளிகளில் படித்து சாதனை படைத்து,  தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்கள் 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு  தெரிவித்தார்.

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாராட்டு விழாவில்  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு, ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழும் மடிக்கணினியும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது,  ஒரு காலத்தில் கல்வி எட்டாக்கனியாக இருந்தது, நீதிக்கட்சி மூலம் கல்வி கிடைக்க வழிவகை கிடைத்துள்ளது என்று பாராட்டினார்.

இந்த பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  முந்தைய தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் நமக்கு கல்வி கிடைத்துள்ளது. நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூகநீதி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நாள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி வரலாற்றில் முக்கியமான நாள்.

225 அரசு பள்ளி மாணவர்கள், முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு மேற்படிப்பு பயிலச் செல்வது சாதனை என்றவர்,  பள்ளிக் கல்வித்துறையில் இன்றைய நாள் கொண்டாட்டத்திற்கு உரிய நாள் என்றார்.

பள்ளிக்கல்வித்துறையில் தினந்தோறும் முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். ஒரு காலத்தில் கல்வி எட்டாக்கனியாக இருந்தது. தனியார் பள்ளி மாணவர்களால் மட்டுமே முடியும் என்ற நிலை மாறி உள்ளது.  நீதிக்கட்சி மூலம் கல்வி கிடைக்க வழிவகை கிடைத்துள்ளது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், கல்வியிலும் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடும் இதுதான்.

கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என்றவர்,   பள்ளிக்கல்வித்துறையில் கடுமையான முயற்சியால் இது சாத்தியமாயிற்று. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர் ஒருவர்தான், இந்த ஆண்டு 6 பேர் ஐஐடி-க்கு செல்கின்றனர்.

சிறிய தூண்டுதல் கிடைத்தால் கூட தமிழக மாணவர்கள் தூள் கிளப்பி விடுவார்கள். முதன்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை உயர வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் அனைவருக்கும் ஐஐடி திட்டம். 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு செல்ல உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கடுமையான முயற்சியால் இது சாத்தியமானது. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஐஐடி-க்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர் ஒருவர்தான், இந்த ஆண்டு 6 பேர் ஐஐடி-க்கு செல்கின்றனர்.

கடந்த ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 75, இந்த ஆண்டு 225 பேர் செல்கின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் செல்லும் போதுதான் சமூகநீதி முழுமையடைகிறது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர வேண்டும் எனில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே முழு நேர கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.