சென்னை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 89ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
திக தலைவரும், விடுதலை செய்திப் பத்திரிகை ஆசிரியருமான கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வருடன் துரைமுருகன் மற்றும் கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.