சென்னை,

‘ஜெ.மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அதிமுக சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சசி அதிமுக சார்பில் அவரது அக்காள் மகனான டிடிவி.தினகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தானே இரட்டை இலை சின்னத்தில் போட்யிடுவேன் என்று அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டைஇலையை  தங்களுக்கு ஒதுக்கும்படி பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் மனு கொடுத்துள்ளார்.

அதில்,  தேர்தல் சின்னம் சட்டப்படி வேட்பாளர் மதுசூதனுக்குதான் இரட்டை இலையை ஒதுக்கும்படி மனோஜ் பாண்டியன் மனு கொடுத்துள்ளார்.

ஏற்கனவே, நாங்கள்தான் அதிமுக என்று சசி அதிமுக அணியை சேர்ந்தவர்களும், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் நாங்கள்தான் உண்மையான அதிமுக என சொல்லி வருகிறார்கள். இதுகுறித்து இரு அணியினரும் ஏற்கனவே டில்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதியை சந்தித்தும் பேசி உள்ளார்கள்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியினிரின் இன்றைய மனு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இந்த விசயத்தில் 20ந்தேதிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறி உள்ளது. இரு அணிகளின் பிரச்சினை காரணமாக   இரட்டை இலை முடக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.