சென்னை

டைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என மதிமுக தலைமைச் செயலர் துரை வைகோ கூறி உள்ளார்.

நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.  இறுதி நாளான நேற்று அனைத்து கட்சி பிரமுகர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.  இதில் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் மதிமுக தலைமை கழக செயலர் துரை வைகோ நடந்தும் வாகனத்தில் சென்றும் பிரச்சாரம் செய்தார்.

அவ்ர் அப்போது செய்தியாளர்களிடம்,”பாஜக வலதுசாரி சிந்தனையுடன் அரசியல் செய்து வருகிறது. அதிமுகவும் அதற்கு துணை நின்றது. தேர்தலின் போது மட்டுமே மாணவி லாவண்யா விவகாரம் போன்ற பிரச்சினைகளை பாஜகவினர் எழுப்புகின்றனர். இவ்வாறு  மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவுக்கும், அக்கட்சிக்குத் துணை நிற்கும் அதிமுகவுக்கும் இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புட்டுவார்கள்.

திமுக அரசு தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது..  கடந்த  2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது. ஆகவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.” எனத் தெரிவித்தார்.