சென்னை: போலி ஏஜென்டுகள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சிக்காதீர்கள் என மியான்மர் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களிடையே பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி, மியான்மருக்கு அனுப்பிய போலி ஏஜண்டுகளால், அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் சிக்கி அவதிப்பட்ட னர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோவால், தமிழகஅரசு, மத்தியஅரசு உதவியுடன் அவரைகளை மீட்டது. அவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்களை தமிழக  அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொன்னாடை அணிவித்து அவர்களை வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  பல்வேறு ஏஜென்டுகள் மூலமாக தாய்லாந்துக்கு வேலைக்கு சென்றவர்கள் சொன்ன வேலைக்கு பதிலாக வேறு வேலை செய்யச் சொன்னதால் தாய் நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். மேலும் இவர்கள் அங்கு பல்வேறு சித்திரவதைகள் அனுபவித்து உள்ளனர். இதனை அறிந்த தமிழக முதல்வர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரை மீட்டுள்ளோம். மீதம் உள்ளவர்களை விரைவில் மீட்போம்.

போலி ஏஜென்டுகள் மூலமாக வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லாதீர்கள் என தமிழக மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.