குவைத்திற்கு இந்திய வீட்டு பெண் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே குவைத்தில் வீட்டு வேலைக்கு அழைத்து செல்லப்படும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஏகப்பட்ட புகார்கள் வந்தன. அதன் காரணமாக  அவர்களுக்கான விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, குவைத்துக்கு அழைத்து செல்லப்படும்  தொழிலாளர்களுக்கு வங்கி உத்தரவாதம் (Bank guarantee) வழங்க வேண்டும் என்றும், வீட்டு வேலைக்கு வரும் பெண்களுக்கு,   2500 டாலர்கள் மதிப்பு உள்ள வங்கி உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே வேலைக்கு அழைத்துவர முடியும் என்று இந்திய அரசு ஆணை பிறப்பித்தது.

இதற்கு குவைத்து ஒத்துக்கொள்ள மறுத்து,  கடந்த(2014 டிசம்பர்) மூன்று ஆண்டுகளுக்கு, வீட்டு வேலைக்கு பெண்கள் அழைத்து வர தடை விதித்தது.

இதேபோல் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் நாடும் வீட்டு பணிப் பெண்களை அனுப்புவதற்கு தடை விதித்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய தூதரகத்துடன் குவைத் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில், அரசு அறிவித்தத  உத்தரவாதம் (Bank guarantee) விலக்கி கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்திய அரசு செவிலியர்களை வளைகுடா அழைத்து வர ஆறு ஏஜென்சிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கி உள்ளது.

மேலும், வேலைக்கு அழைத்து வரப்படும் நபர்களிடம் நேர்முக தேர்வு நடத்த வேண்டும் என்பது புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 20ந்தேதி குவைத் வர இருக்கும் இந்திய  வெளியுறவுத் துறை துணை அமைச்சர் M.J.அக்பர் அவரும் அக்பர்,  குவைத் அதிகாரிகளுடன் நடத்தும் பேச்சு வார்த்தையில் இறுதியான முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக  உரிமம் வழங்கியுள்ள  ஏஜென்சிகள் விவரம்:

1)Non-Resident Keralites Affairs Department (NORKA-ROOTS)

2)Overseas Development and Employment Promotion Consultants Ltd (ODEPC),

3(Overseas Manpower Corporation Limited (OMCL)

4)Uttar Pradesh Financial Corporation, government of Uttar Pradesh

5)Telanga Overseas Manpower Company (TOMCOM)

6 Overseas Manpower Company, Andhra Pradesh

வேறு எந்த போலியான ஏஜெண்டுகள் நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கும், குவைத்துக்கு வேலைக்கு வர விரும்புவர்களின் கவனத்திற்காகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போலியான ஏஜன்சிகளையோ, ஏஜண்டுகளையோ   நம்பி, தங்களது பணத்தையும், வாழ்க்கையை யும் தொலைக்க வேண்டாம் என்றும், அதன் காரணமாக பிரச்சினையில் சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த விவரங்கள் குவைத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.