தராபாத்

தராபாத் நகரில் மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து தானமாக அளிக்கப்பட்ட  இதயம் மெட்ரோ ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வேறொருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

 

தானத்தில் சிறந்தது இதய தானம் ஆகும்.   இறக்கும் தறுவாயில் உள்ள ஒருவருக்கு மறுவாழ்வு அளிப்பது இதய தானம் ஆகும்.   மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து பொதுவாக இதயம் தானமாகப் பெறப்படுகிறது.  அந்த இதயத்தை உடனடியாக மற்றொரு நபருக்குப் பொருத்தினால் அவர் உயிர் காக்கப்படுவார்.

 

அவ்வகையில் தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் எஸ் பி நகர் பகுதியில் காமினேனி என்னும் தயார் மருத்துவமனை உள்ளது.  இங்கு அனுமதிக்கப்பட்ட 45 வயது நபர் மூளைச் சாவு அடைந்தார்.  அவர் உறவினர்கள் அவரது உடல் உறுப்புக்களை தானம் செய்து மற்றவருக்கு அளிக்க ஒப்புதல் தந்தனர்.

 

அவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட இதயத்தை ஐதராபாத் நகரில் ஜூபிலி ஹில்ஸ் பதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.   காமினேனி மற்றும் அப்போலோ மருத்துவமனை இரண்டும் 21 கிமீ தூரத்தில் உள்ளது.   போக்குவரத்து நேரம் சுமார் 1 மணி ஆகும் என்பதால் மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

 

இதையொட்டி சிறப்பு அனுமதிகள் உடனடியாக பெறப்பட்டு ஒரு தனி ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.  காமினேனி மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்ட இதயம் ஐதராபாத் நகர நாகோல் மெட்ரோ ரயில் நிலையில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்குச் சிறப்பு மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டது.

[youtube https://www.youtube.com/watch?v=VZYhiT9WSus]

இந்த ரயில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் 16 ரயில் நிலயங்களை எங்கும் நிற்காமல் கடந்து 30 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் ஜூபிளி ஹில்ஸ் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.  அங்கு தயாராகக் காத்திருந்த ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோ மருத்துவமனைக்கு இதயம் எடுத்துச் செல்லப்பட்டு வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.