ஒடிசா: 
ன் உயிரை கொடுத்து தன்னை வளர்த்தவர்களின் உயிரை காப்பாற்றிய பாசமுள்ள நாய் பாம்புகளை கொன்று தானும் இறந்தது.

பாம்புகளை கொன்று தன் உயிரை துறந்த பாசக்கார நாய்
பாம்புகளை கொன்று தன் உயிரை துறந்த பாசக்கார நாய்

       ஒடிசா மாநிலங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிகள்    நிறைய உள்ளளது. அங்கு வன விலங்குகள், விஷ நாகங்கள்  அதிகம் காணப்படும். அதேபோல் ஒடிசாவிலுள்ள கஜபதி மாவட்டம் விஷப் பாம்புகள் அதிகம் காணப்படும் பகுதியாகும்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தினர்    பாம்புகள்  கிராமத்திலுள்ள வீடுகளுக்கு வராதவாறு தடுப்பதற்காக நாய்கள் வளர்ப்பதுண்டு.
சம்பவத்தன்று சேப்கபூர் என்ற கிராமத்தில் திபாகர் ரய்தா என்பவர் வீட்டு பகுதிக்கு நான்கு கொடிய விஷ பாம்புகள்  வந்துள்ளன. இதை கவனித்த அவரது நாய், அந்த 4 பாம்புகளிடமும்  கடுமையாக சண்டையிட்டு கடித்துக் கொன்றது.  பாம்புகள் கொத்தியதில் நாயும் பரிதாபமாக இறந்தது.
இதுபற்றி திபாகர் ரய்தா கூறுகையில், நான் வளர்த்த செல்ல நாய் மிகவும் பாசமுள்ளது. நாங்கள் மொத்தம் 8 பேர். பாம்புகள் எங்கள் வீடுகளில் புகுந்திருந்தால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். நாய் தனது உயிரை கொடுத்து எங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றி விட்டது என கண்ணீர் மல்க கூறினார்.