பருப்பு விலை: உள்நாட்டு உற்பத்தியை பெருக்குமா அரசு ?

சில ஆண்டுகளாய் கிராமங்களில் தொடரும் வறட்சியின் பாதிப்பை நகர மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

pulse4
கடந்த மாதம், உணவு-பணவீக்கம் 7 % உயர்ந்து, இந்த ஆண்டின் அதிகப் பட்சத்தை அடைந்தது. பருப்பு வகைகள், தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளில் அதிகப்பட்சமான விலையுயர்வு காணப்பட்டது. இருப்பு குறைவு, தேவை அதிகம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாகவே பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் பருப்பு விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பருப்பு விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான நீண்டகால தீர்வு என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

pulse 01
தக்காளி விலையுயர்வுக்கு காலநிலை மாற்றமே காரணம். எனவே அதன் விலை ஒரு சில வாரங்களில் குறைந்துவிடும். ஆனால், நமது உணவுப் பழக்கத்தில் , புரதச் சத்தின் முக்கிய ஆதாரமான பருப்பு விலை உயர்வு நிரந்தரமானது ஆகும்.
வறட்சியும் விவசாயத்தில் பின்னடைவும்:
பருப்புவகைகளின் விலை உயர்விற்கு முக்கியக் காரணம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை பாதித்துள்ள வறட்சியாகும்.

DROUGHT MAHARASTRA
உளுந்து, பாசிப்பயறு போன்றவை ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. இந்த மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சி, விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளிவருகின்றது. விவசாயிகள் தற்கொலைச் சம்பவம் அன்றாட நிகழ்வாகிப் போய்விட்டது.
இந்நிலையில், ஈரமில்லாத பகுதியில் நெல் பயிரிட்டால் 59% மகசூலும், கோதுமை பயிரிட்டால் 93% மகசூலும் சாத்தியம். ஆனால் பருப்பு வகைகள் பயிரிட்டால் வெறும் 16% மகசூல் மட்டுமே சாத்தியம். ஏனெனில் உலர்ந்த நிலத்தில் பயிர்ச் சேதம் அதிகமாக ஏற்படும். எனவே விவசாயிகள் பருப்புவகைகளைப் பயிரிட தயங்குகின்றனர்.

இருப்பை மீறிய தேவை: 
நமது நாட்டின் சராசரி பருப்பு பயன்பாடு 23 மில்லியன் டன் ஆகும். கடந்த 2013-’14 ஆண்டில் அதிகப்பட்சமாக 19.8 மில்லியன் டன் பருப்புவகை உற்பத்தியை எட்டிய இந்தியா, 2015-’16ம் ஆண்டில் வெறும் 17.3 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

pulse1
நன்றி: ஸ்குரோல்.இன்

இதன் எதிரொலியாகத்தான், தற்போது ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.225க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.180-185 வரை விற்பனையானது. உளுந்து ஒரு கிலோ ரூ.190, கடந்த வாரம் ரூ.160 – 165க்கு விற்பனையாயின. பாசிப்பருப்பு கடந்த வாரம் விற்ற ரூ.130 விலையே தொடர்கிறது.

Picture1

இந்தியன் எக்ஸ்பிரஸின் விவசாயப் பிரிவு எடிட்டரான ஹாரிஷ் தாமோதரன் அவர்களின் கணக்கீட்டின்படி, உலகின் வருடாந்திர சராசரி வர்த்தகம் 15 மில்லியன் டன் ஆகும். இது இந்தியாவின் வருடாந்திரத் தேவையை விட மிகவும் குறைவானதாகும்.

இந்தியாவில் பருப்பு இறக்குமதிக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளதும் மற்றொரு காரணமாகும். முட்டை மற்றும் அசைவ உணவில் இருந்து புரதச் சத்தினை உட்கொள்ளும் பெரும்பாலான நாடுகள் பருப்பினை விளைவிக்க ஆர்வம் காட்டவிலை.
பருப்பின் தரம் மற்றும் ருசியின் காரணமாக மியன்மார், மொசாம்பிகியூ மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்வதிலும் சிக்கல் உள்ளது. இந்தியாவில் தயாராகும் துவரம் பருப்பின் தரம் இறக்குமதி பருப்பினை விட மிகஅதிகமென்பதால், நுகர்வோர் இறக்குமதி பருப்பினை வாங்க ஆர்வம்காட்டுவதில்லை. எனவே பருப்புவிலை குறைய வேண்டுமெனில், உள்நாட்டில் பருப்பு உற்பத்தி செய்யப்பட வேண்டியது அவசியம்.

பதுக்கல் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் பங்கு:
பதுக்கல், ஆன்லைன் வர்த்தகத்துக்கு அனுமதி ஆகியவற்றால் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக சுமார் 1,300 மார்க்கெட் கடைகள் உள்ளன. ஒவ்வொரு வணிகரும் சுமார் 500 டன் வரை இருப்பு வைக்கலாம் என்பது பொதுவான விதி. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் தங்களது குடோனில் 500 டன் வரை பருப்பு வகைகளை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக்கொள்கின்றனர். அத்துடன் உணவுப்பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் பெறலாம் என்பதால் செயற்கையாக தட்டுப்பாடு உருவாகி உள்ளது. இவ்வகை வர்த்தகத்தால் ஓராண்டுக்கான பருப்பு வகைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கியும் சேமித்து வைத்துக்கொள்வதால் பருப்பு வகைகளுக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?
பருப்பு வகைகளை ஆன்லைன் வர்த்தகத்தில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து பருப்பு வகைகளை நீக்கினால் மூட்டைக்கு ரூ.30 வரை விலை குறைய வாய்ப்புள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் மொத்த கொள்முதல் அளவை குறைத்தால் விலை குறைய வாய்ப்புள்ளது.

மத்திய அரசு இதுவரை செய்துள்ளதென்ன ?
கடந்ட மாதம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் உண்வுவிலையை குறிப்பாக பருப்பு விலைஅயை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

pulse 3
ஆப்ரிக்காவில் உள்ள மொசாம்பிகுவேவிற்கு பயணித்த அரசு அதிகாரிகள் குழு பருப்புவகைகளை அங்கிருந்து இறக்குமதி செய்வது மற்றும் மலவானியில் உள்ள விவசாயிகளுலன் உடன்படிக்கை செய்துக் கொண்டு, அவர்களிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

pulse map_of_mozambique
வர்த்தகர்கள் கிடங்கில் கையிருப்பில் வைக்கும் அளவை குறைத்தது. இதன் மூலம் பதுக்கலை தடுக்கமுடிந்தது. பருப்பு வகைகள் மீதான பொருள் வர்த்தகத்தினை தடை செய்தது.
மேலும் உண்வு அமைச்சர் இனிவருங்காலங்களில் கையிருப்பு அளவை படிப்படியாக 50 லட்சம் டன்னில் இருந்து , ஒரு லட்சம் , பின்னர் 8 லட்சம் டன் என உயர்த்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இது விவசாயிகளிடமிருந்து அரசு வாங்கும் ” குறைந்தப் பட்ச கொள்முதல் விலையைப் பொருத்துள்ளது.
விவசாயப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் கமிஷனின் உறுப்பினரும் , பொருளாதார நிபுணருமான Dr. சுரேஸ் பால் ” அரிசியைவிட தற்பொழுது பருப்புவகைகளுக்கு குறைந்தப்பட்ச கொள்முதல் விலையை அதிகமாக்கி உள்ளது.
நாங்கள் ஒரு டன்னிற்கு ரூபாய் 46250 சிபாரிசு செய்திருந்தோம், அமைச்சரவைக் கமிட்டி 4250 ரூபாய் ஊக்கத்தொகையாகச் சேர்த்து ஒரு டன்னுக்கு ரூபாய் 50500 என அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.2% அதிகமாகும்.
அரிசிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 15100 ரூபாய் என்பது கடந்த ஆண்டைவிட 4 5 அதிகமாகும்.
Dr. பாலின் கணிப்புப்படி, ” இந்த 9.2% அதிகமான கொள்முதல் விலை, விவசாயிகளை பருப்புவகைகளை பயிரிடத்தூண்டும் ” .
ஆனால், அனுபவமிக்க விவசாயிகள், அரசின் இந்த அறிவிப்பு போதாது. அரசு மேலும் சில திடமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். அப்போது தான் பருப்புவகை விவசாயம் மேம்படும் என்கின்றனர்.
விவசாயப் பொருளாதார நிபுணர்களான Dr அசோக் குலாட்டி மற்றும் சுவேதா சைனி ஆகியோர், “அரசின் முடிவான வியாபாரிகளின் கையிருப்பு அளவை குறைப்பது என்பது உடனடியாக பயனைத் தந்தாலும், நெடுங்கால தீர்வு ஆகாது. இது அதிகாரப் பூர்வமாக கையிருப்பு வைத்திருக்கும் வியாபாரிகளையும் ஒரே அறிவிப்பின் மூலம் பதுக்கல்காரர்களாக்கும் செயலாகும். மேலும், இது பெருவியாபாரிகளை விவசாயப் பொருட்களை வைப்பதற்கான சேமிப்புப் கிடங்கு கட்டுவதற்காக முதலீடுகளை செய்வதில் இருந்து தள்ளிவைக்கும்.
இந்தியா இறக்குமதி செய்வதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதனை விளக்குகின்றார், இந்திய பருப்பு மற்றும் தானிய உற்பத்தியாளர் சங்க செய்தித்தொடர்பாளர் எஸ்.பி. கோயன்கா .
அவர் கூறுகையில், ” இவ்வாறு இந்திய அரசு அதிக அளவில் இறக்குமதி செய்வதாக வெளிப்படையாக அறிவித்து விட்டதால், மொசம்பிகுவேயில் உள்ள வியாபாரிகள் சுதாரித்துக் கொண்டு , அங்கு பதுக்கலில் ஈடுபடுவர். அதன் மூலம் அங்கு தட்டுப்பாடு ஏர்படும், இந்திய அரசு அதிக விலைக் கொடுத்து பருப்பினை வாங்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில், பருப்பு உண்பதையும் மக்கள் குறைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படும்” என்றார்.
எனவே அரசு, இறக்குமதி குறித்த முடிவினை வியாபாரிகளிடம் விட்டுவிட்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
“அரசு அவசர கையிருப்பு அளவை அதிகரித்துள்ளது வரவேற்கவேண்டிய ஒன்றுதான் என்றாலும், பொருளாதார நிபுணர்கள் சிபாரிசு செய்யும் அளவான “20 லட்சம் முதல் 30 லட்சம் டன்” எனும் அளவுடன் ஒப்பிட்டால் வெறும் 5 சதவிதம் மட்டுமே.
மேலும், இந்த கொள்முதல் அளவினை பாதுகாப்பாய் வைக்க இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இடம் உள்ளதா என்பது கேள்விக்குறி.
உண்மையான களநிலவரம் என்னவென்றால், உண்மையில் இந்திய உணவுக் கழகமும், தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பும் இந்த சவாலை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லை.
கடைசியாக, அரசு அறிவித்துள்ள, 10 சதவிகித கொள்முதல் விலையுயர்வு நிச்சயம் போதாது. மத்திய அரசு இன்னும் அதிகமாக அறிவித்தால் தான் பஞ்சாப், ஹரியானா, மகாராஸ்திரா பகுதி விவசாயிகள் பருப்புவகை விவசாயத்திற்கு திரும்புவார்கள்.
இல்லையெனில் விவசாயிகள் தொடர்ந்து ஒரு ஹெக்டேருக்கு அதிக மகசூலைக் கொடுக்கும் கோதுமை மற்றும் அரிசி வகையையே பயிரிடுவார்கள் என்பது திண்ணம்.

நன்றி: ஸ்குரோல்.இன்