தூத்துக்குடி

சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஒப்படைத்தார்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு மரணம் அடைந்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதையொட்டி விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையொட்டி சிபிஐ அதிகாரிகள் குழு தூத்துக்குடி வந்தது.  இந்தக் குழுவில் சிபிஐ அதிகாரி விஜய்குமார் சுக்லா தலைமையில் அனுராஜ் சிங், பவன்குமார் திவேதி, சைலேஷ்குமார், சுசில்குமார், அஜய்குமார், சச்சின், பூன்ம உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.    இவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தனர்.

அவர்கள் சிபிசிஐடி அலுவலகம் சென்று அங்கு அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினர்.  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கிய லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆவணங்களை  சிபிசிஐடி அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.  இவை அனைத்தும் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளது.