கோரக்பூர்

கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றிய அனைத்து ஆவணங்களும் அமைச்சரவைக்கு அனுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாப மரணம் அடைந்தனர்.   அரசும் அமைச்சரவையும் தங்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என கூறிய நிலையில்,  தற்போது அனைத்து முறைகேடுகளும் உடனக்குடன் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

ஆக்சிஜன் விற்பனையாளருக்கு பில் பணத்தை செலுத்தாததையும், அதனால் அவர் அனுப்பிய நினைவூட்டல் கடிதங்களையும் மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் அசுதோஷ் டண்டனுக்கு அனுப்பியுள்ள ஆதரங்கள் கிடத்துள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, அதாவது குழந்தைகள் இறப்பு ஏற்படும் சில மணிகள் முன்பு கல்லூரி முதல்வருக்கு சீஃப் மெடிகல் சூப்பரிண்டெண்ட் ராமசங்கர் சுக்லா, ஆக்சிஜன் இருப்பு குறைந்துக் கொண்டே வருவதாகவும்,  வியாபாரி ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி விட்டார் என்பதையும் தெரிவித்துள்ளார்.  மேலும் அந்தக் கடிதத்தில் , “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.   இல்லையெனில் பல உயிர்களுக்கு இது பேராபத்தாகும்.   அது தவிர வேறு எங்காவது மருத்துவ ஆக்சிஜன் கிடைக்குமா எனப் பார்த்து உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.   இந்த கடிதம் மற்றுமுள்ள மருத்துவ அதிகாரிகளுக்கும் அமைச்சகத்துக்கும் அனுப்பப்ட்டு உள்ளது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று ஆக்சிஜன் விற்பனையாளரான புஷ்பா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ் பண்டாரி உடனடியாக சிறிதளவு தொகையாவது அளிக்குமாறு அமைச்சர் அசுதோஷ் டண்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.   அதில் அவர் பணம் செலுத்தாவிடில் தம்மால் ஆக்சிஜன் தொடர்ந்து வழங்க இயலாத நிலையில் இருப்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  அது மட்டுமின்றி பாக்கித்தொகை அதிகரிக்க அதிகரிக்க அடிக்கடி நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.  இந்த கடிதத்தின் நகல்கள் அமைச்சகத்துக்கு,   ஒரு கடிதம் நேரடியாக முதல்வர் யோகிக்கும் அனுப்பபட்டுள்ளது.

இது குறித்து ஜூலை 10ஆம் தேதி அன்று சமாஜ்வாதி கட்சியின் மேல்சபை உறுப்பினர் சந்த் இந்த மருத்துவமனையில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் அளித்திருந்தார்.   அதற்கு அமைச்சர் விரைவில் பதில் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.   ஆனால் இன்றுவரை பதில் இல்லை.   சந்த் எழுப்பியுள்ள புகார்களில் ஒன்று,  அறுவை சிகிச்சை உபகரணங்கள் என்ற பெயரில் உயர் அதிகாரிகளுக்கு போர்வைகள் வாங்கப்பட்டது பற்றி ஆகும்.  அதற்கும் பதில் இல்லை.