சென்னை

வண எழுத்தர்களுக்குச் சார்ப் பதிவாளர் அலுவலகங்களுக்குள் அனுமதியில்லை என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

நேற்று பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“தமிழக அரசின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. தவிர, ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள், இடைத் தரகர்களை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எனவே  சம்பந்தப்பட்ட துணை பதிவுத் துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் தங்களது எல்லைக் கு உட்பட்ட பதிவு அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

இதனால் ஆவணம் எழுதுபவர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் வருவது தவிர்க்கப்பட்டு வருகிறது. 

தமிழக ஆவண எழுத்தர்கள் உரிமை விதிகளின் கீழ், அவர்களுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், ஆவண எழுத்தர்கள் யாரும் பதிவு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது.  அவர்கள்:பதிவு அலுவலரின் அழைப்பின் பேரில் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைந்திட வேண்டும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.