டில்லி

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையை டில்லி அரசு ரத்து செய்துள்ளது.

ஒமிக்ரான்  பரவல் அதிகமாக உள்ள மாநிலத்தில் டில்லியும் ஒன்றாகும்.  இதனால் இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   டில்லியில் தினசரி பாதிப்பு 5000 ஐ தாண்டி வருகிறது.  தற்போது  சுமார் 12000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களைத் தவிர அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளிகளும் டில்லியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதையொட்டி டில்லி அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக மருத்துவர்களின் குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலொ மருத்துவர்களுக்கு நாளை முதல் ஜனவரி 10 வரை குளிர்கால விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவர்களின் குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அந்த மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.