தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி

Must read

சென்னை,

மிழகம் முழுவதும் இன்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் மேற்படிப்புக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 29 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மட்டும் 1,225 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

ஆனால், ‘இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்படி, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்றும், தமிழகத்தில் மீண்டும் 50 சதவிகித இட ஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தினார்.

இன்று காலை 7 மணி முதலோ இந்த போராட்டம் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக  நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை கோரி, டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட பல இடங்களில், நேற்று தர்ணா மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article