இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உரிமையுடன் இணைந்து தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டிவிக்கு கேட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம்.

ஆனால், தயாரிப்பு நிறுவனமோ தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு கொடுத்துவிட்டது.

முதலில் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் பின்னர் ரம்ஜானுக்கு தள்ளிப்போனது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால், ‘டாக்டர்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடாகத் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.