இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தவர் யார் என்று தெரியுமா? : ஆர்.சி. சம்பத்

Must read

பொலிடிகல் பொக்கிஷம்: 2
அண்ணா புதுக்கட்சி துவங்கியது ஏன்?
(திமுக. பிரமுகர் முல்லை சத்தி 1962-ல் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.)

அண்ணா - பெரியார்
அண்ணா – பெரியார்

’பெரியாரின் திருமணம் காரணமாகக் குமுறிய கழகத் தோழர்களிடம் இருவிதக் கருத்துகள் நிலவின. திராவிடர் கழகத்தையே கைப்பற்றி,பெரியாரைக் கட்சியை விட்டு விலக்க வெண்டும் என்பது அவற்றுள் ஒன்று.  இந்த கருத்தைப் பெரும்பாலோர் ஆதரித்தனர்.
இக் கருத்தை ஒத்த தோழர்களுக்குத் தலைமை வகித்தவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், நாவலர் நெடுஞ்செழியனும் ஆவர்.
“பெரியார் வாழ்ந்துவரும் ‘சென்னை மீரான் சாகிப் தெரு வீட்டையும், விடுதலை அலுவலகத்தையும், பெரியார் சுற்றுப் பயணம் செய்ய பயன்படுத்தும் வேனையும் நாம் கைப்பற்ற வேண்டும். அவை நமது உழைப்பால் திராவிடர் கழகத்துக்குக் கிடைத்தவை.
‘பெரியாரை பெரும்பான்மையினரான நாம் எதிர்கிறோம். .நாம்தான் அதற்கு ஆதாரபூர்வமான உரிமையாளர்கள். ஆகவே ,நாம் அவற்றைக் கைப்பற்றி திராவிடர் கழகத்தை நடத்திச் செல்ல வேண்டும்.,’’ என்று வீர முழக்கமிட்டார் பாரதிதாசன்.
பாரதிதாசன்
பாரதிதாசன்

‘’பெரியாரை பெருபான்மையினர் எதிர்ப்பதால் ஜனநாயக நீதிப்படி பெரியார் தான் கட்சியை விட்டு விலகவேண்டுமே தவிர நாமல்ல!’’ என்று வாதாடினார் நெடுஞ்செழியன்.
ஆனால், அண்ணா இந்த இருவரின் கருத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. அண்ணா, ‘பெரியாரை நம்மில் பெருபான்மையினர்  எதிர்பது உண்மைதான்.வாதப்படியும், சட்டப்படியும் திராவிடர் கழகம் நமக்குத்தான் சொந்தம்.அதையும் ஒற்றுக் கொள்கிறேன்.ஆனால், முறைப்படி நாம் கழகத்தைக் கைப்பற்றினாலும், பெரியார் அந்த முறைக்குக் கட்டுப்படப் போவதில்லை. கழகத்தைக் கைப்பற்றி, குறிக்கோளை வெற்றிகரமாக்குவோம் என்ற நமது ஆசை நிறை வேறாது.
‘’கழகம் யாருடையது” என்று முடிவுகாண இயலாத வழக்கிலேயே மூழ்கிக் கிடக்க நேரிடும். திராவிடர் கழகத்தைக் களமாக்கி , தோழர்களிடையே மோதலை மூட்டிவிட்டு, நாம் காணும் வெற்றி, கடைசியில் ஒரு  லேபிளாக இருக்குமே தவிர,வேறு ஒன்றுமிராது.
ஆகவே, நாம் திராவிடர் கழகத்தை பெரியாரிடம் ஒப்படைத்து விட்டு, நாம் வெளியேறி, புதிய அமைப்பு காண்போம்”. என்று கூறினார்.
இதன் காணமாகவே தி.மு.க. என்னும் புதிய கட்சி துவங்கப்பட்டது.
ராஜாஜி
ராஜாஜி

அப்போதே அணைக்கு அணைபோட்ட கேரளா!
(மூதறிஞர் ராஜாஜி’என்ற நூலில் காணப்படும் வரலாற்றுச் செய்தி)
‘கேரளத்தில் திருவிதாங்கர் பகுதி  மன்னராட்சிக்கு உட்பட்டிருந்த காலம். அதன் ஆளுகைக்குள் இருந்த பகுதிகளுள் ஒன்று, வண்டிப் பெரியார் நீர்பிடிப்பு பகுதி.
சென்னை மாகாணத்தில் இருந்த அன்றைய பிரிட்டிஷ் சர்க்கார், வண்டிப் பெரியார் நீர்பிடிப்புப் பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ,அங்கு ஒரு அணை கட்ட திட்டமிட்டது. இதன் மூலம்,  தண்ணீரைக் கிழக்கு முகமாகத் திருப்பி  மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன வசதி ஏற்படுத்துவதே அதன் திட்டம்.
ஆனால், திருவிதாங்கூர் மன்னரோ, தன் ஆளுகைக்குட்பட்ட அந்த நீர்பிடிப்பு பகுதியை ((பல லட்சம் ஏக்கராக்கள்) வாடகைக்குத் தர மறுத்தார்.  அவரை சென்னை ராஜதானி நிர்பந்தித்தது. இதையடுத்து 999 வருடங்களுக்கு இப்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டது. வாடகைஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு அணா (அதாவது,ஆறு பைசா) 1898-ல் அணை கட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சி 1946-ல் அட்சிக்கு வந்த பிறகு இந்த அணையில், (நீர்) மின்சாரம் தயாரிக்க முன்வந்தது. இதையும், திருவிதாங்கூர் அரசு பலமாக ஆட்சேபித்தது. அணை கட்டி நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்துவதாகத்தான் ஒப்பந்தம். ஆகவே அணையில் மின்சாரம் தயாரிக்க கூடாது என்று ஆட்சேபித்தது திருவிதாங்கூர் அரசு.
பட்டம் தாணுப்பிள்ளை
பட்டம் தாணுப்பிள்ளை

சென்னையில் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் கேரளத்தில் ‘ பட்டம் தணுப்பிள்ளை’ முதலமைச்சராக இருந்தார். அவரிடம் அனுமதி கேட்டதற்கு, அவருக்கு ஆவேசம் வந்து விட்டது.
தாணுப்பிள்ளை கோபத்தோடு ’’தமிழ்நாட்டுக்கு டிரவாங்கூர் முன்பு வெள்ளம் கொடுத்து…!  ரெண்டர லட்சம் ஏக்கராக்கு வெள்ளம் கிட்டி:   நெல்லு கிட்டி: அரி கிட்டி. டிரவாங்கூக்கு எந்தா கிட்டி?  ஏக்கருக்கு ரெண்டணா கிட்டி!
கேரளத்திலே அரி குறவாணு! அரி பஞ்சமானு!
அப்போம் வெள்ளம்  குடுத்து… இப்போ எலக்ட்ரிசிட்டி கொடுக்கணுமோ? கேரளத்துக்கு எந்தா லாபம்?  ஒத்தெய் பைசாவுமில்லை!” என்று பொரிந்து தள்ளினார்.
பிறகு ஒரு  யூனிட் உற்பத்திக்கு இரண்டு பைசா வீதம் கேரளாவுக்கு வரி செலுத்தி மின்சாரம் தயாரிக்க அனுமதி பெற்றார், ராஜாஜி.
(இரட்டை இலை சின்னம் பிறந்த கதை)
ண்ணா தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரபித்ததும் சந்தித்த முதல் தேர்தல் , திண்டுகல் இடைத் தேர்தல். அதில் இரவது  வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்று எம்.பி.ஆனார். இந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட சுயேட்சை சின்னம் ‘இரட்டை இலை’. பிறகு அதுவே  நிரந்தரச் சின்னம் ‘ஆயிற்று. இது பற்றி மாயத்தேவர் ஒரு  கட்டுரையில் சொல்கிறார்.
‘திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தல் 1973-ல் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., என்னை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்தார். இதர அரசியல் கட்சிகள் அவரவருக்கு ஏற்கெனவே  ஒதுக்கப்பட்ட சின்னங்களைப் பெற்றுக் கொண்டனர்.
1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர், எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கிறார்
1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர், எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கிறார்

அன்று அதிமுகவிற்கு எந்தச்  சின்னமும் கிடயாது. காரணம் அதிமுகவிற்கு இதுதான் முதல் தேர்தல்.  அன்று தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய  மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு சின்னங்களை என்னிடம்  கொடுத்து, அச்சின்னங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.
அனைத்து சுயேட்சை சின்னங்களையும் பார்த்து, ஆழ்ந்த சிந்தனையில் கலெக்டர் முன்பு அமர்ந்திருந்தேன்.
சென்னையில் எம்.ஜி.ஆர்., “சின்னம் என்ன?“ என்று ஆவலோடு  எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு, இரட்டை இலை சின்னம் தேர்வு செய்து, ’அந்த சின்னத்தை எங்கள் கட்சிக்கு ஒதுக்குங்கள்’ என்று கலெக்டரிடம் கோரினேன். கலெக்டரும் அதிகாரபூர்வமாக இச்சின்னத்தை அதிமுக.வுக்கு ஒதுக்கி ஆணையிட்டார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியேரினேன். இப்படித்தான் அதிமுக. சின்னமாக இரட்டை இலை சின்னம் பிறந்தது.”

More articles

2 COMMENTS

Latest article