ரெய்டின்போது எங்கே இருந்தார் சிதம்பரம்! பரபரப்பு தகவல்கள்!!

Must read

சென்னை:

மிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனது வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது சிதம்பரம் எங்கே இருந்தார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடுகள், டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள அவருக்கு சொந்தமான மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின்  வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதியளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்த சோதனை நடைபெற்றது.

ஆனால், நேற்றைய  சிபிஐ சோதனையின் போது கார்த்தி சிதம்பரம் மட்டுமே சென்னையில் இருந்தார். ப.சிதம்பரம் வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் நேற்று  சோதனை மேற்கொண்ட போது, ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு வழக்கு கரணமாக  கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிது தற்போது தெரியவந்துள்ளது.

தனது வீட்டில் சோதனை நடப்பது தெரிய வந்தும், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ர் சிதம்பரம்.

இது அவரது தொழில்பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

More articles

Latest article