நேற்று கட்சி மாநாட்டுக்காக ரயிலில் கமல்ஹாசன்..

 

சென்னை:

13 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ரயிலில் பயணித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம்  இன்று திருச்சியில் நடக்க இருக்கிறது. இதற்காக நேற்று சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு வைகை விரைவுத்தொடர் வண்டியில் கமல் பயணித்தார். முதல்வகுப்பு குளிர்சாதனப்பெட்டியில் அவரும், அவரது கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட உயர் மட்டக்குழுவினர் மற்றும் நிர்வாகிகளும் பயணித்தனர்.

பயணத்தின் இடையே செய்தியாளர்களுக்கு கமல் பேட்டியளித்தார்.

முன்னதாக, இத்தொடர்வண்டி நிற்றும் நிலையங்களில்ல மக்களை சந்திக்கப்போவதாக கமல் அறிவித்திருந்தார். இது பயணிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று பத்திரிகையாளர்கள் மூவர் தென்னக ரயில்வேயிடம் மனு அளித்தனர். அதையடுத்து பிரச்சாரத்துக்கு ரயில்வே துறை தடைபோட்டது.

இதற்கு, “நான் மக்களை சந்திக்க நினைப்பதையம் அரசியலாக்குகிறார்கள்” என்று கமல் வருத்தம் தெரிவித்தார். அதே நேரம் தனது பிரச்சாரத்தை ரத்து செய்து, சாதாரணமாக முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணித்தார்.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமல்ஹாசன்

கமல்ஹாசன் 13 ஆண்டுகளுக்கு பிறகு  நேற்று ரயிலில் பயணித்திருக்கிறார்.

‘மும்பை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரெயில் பெட்டியில் சில காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. ஆகவே அப்போது ரயிலில் கமல்ஹாசனம் பயணித்தபடியே நடித்தார்.

அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது காதலியான மனீஷா, தனது மகனுடன் ரயிலில் பயணிப்பார். அவரிடம் பணப்பெட்டி இருக்கும். இதை அறிந்து காவல்துறை ஜீப்பில் துரத்தும். அப்போது மோட்டார் சைக்கிளில் ரயிலைத் தொடர்ந்து வரும் கமல், ரயில் ஓடும்போதே மோட்டார் சைக்கிளில் இருந்து தாவி ரயிலில் ஏறுவார். பிறகு மனீஷாவை சமாதானப்படுத்துவார்.

இந்த காட்சி ரயிலில் எடுக்கப்பட்டது. அதன் பிறகு  13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் மீண்டும் ரெயிலில் பயணம் செய்துள்ளார் கமல்ஹாசன்.