சென்னை

சென்னை எதிராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.   இவரிடம் ஒரு ஆடி சொகுசு கார் உள்ளது.   இவரிடம் நவாஸ்கான் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

நவாஸ்கான் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு யுவன் சங்கர் ராஜாவின் ஆடி சொகுசு காரை எடுத்துச் சென்றுள்ளார்.   அதன் பிறகு திரும்பி வரவும் இல்லை.  அவரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்ல,    யுவன் சங்கர் ராஜாவும் வீட்டில் அப்போது இல்லை.   அதனால் கார் திருடப்பட்டு விட்டதாக யுவன் சங்கர் ராஜாவின் குடும்பத்தினர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இன்று அதிகாலை திடீரென நவாஸ்கான் ஆடி காருடன் வீட்டுக்கு வந்து காரை விட்டு விட்டு சென்று விட்டார்.   அவர் எங்கு சென்றார் என்பதும் அவ்வளவு நேரம் என்ன செய்துக் கொண்டிருந்தார் என்பதும் மர்மமாக உள்ளது.   இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.