மதுரை: வாரிசு அரசியல் என்பது என்ன  என்று,  மதுரை தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் தெரிவித்து உள்ளார்.

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் வாரி அரசியல் குறித்து சரமாரியாக விமர்சனம் செய்தார். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”காலையிலேயே வியாபாரிகள் மற்றும் மக்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறோம். வறட்சி காரணமாக விலைவாசி உயர்ந்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை எவ்வித தடையுமின்றி வழங்கியிருக்கிறோம். ஆனால், கடந்த ஓராண்டில் அகவிலைப்படியை பிடித்தம் செய்த பிறகு தான் ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.” “அரசு ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார்கள். ஆனால், இதுவரை அது அமல்படுத்தப்படவில்லை. மூன்று வருடமாக நடைமுறைப்படுத்தாதவர்கள் தேர்தலுக்காக இப்போது ஆசைவார்த்தைகளை கூறி வருகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததில் பயனில்லை  என்று கூறுபவர்கள், எதற்காக பாமகவும், அன்புமணியும் மாறி மாறி திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் கள்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு எடுப்பது தான் பாமகவின் அரசியல் . நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக.” என்றார்.

  தி.மு.க. ஒரு கார்பரேட் கம்பெனி என்று விமர்சனம் செய்தவர்,   நான் தலைவன் அல்ல, தொண்டன். அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா?  இன்று கட்சியில் ஒருவர் பதவி வகித்தால் நாளை வேறொருவர் அந்தப் பதவிக்கு வருவார். அது குடும்ப அரசியல் அல்ல. எனக்கு பின்னால் ஒரு சாதாரண தொண்டன் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்” என்றவர்,  திமுகவில் அவ்வாற பதவிக்கு வர முடியயுமா என கேள்வி எழுப்பியவர், வாரிசு அரசியல் குறித்து பாடம் எடுத்தார்.

வாரிசு அரசியல் என்பது கட்சியின் தலைமை பொறுப்புக்கு யார் வருகிறார் என்பதை பொறுத்தது. தேர்தலில் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது என்றவர்,  தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல் என கூறியவர், . எம்எல்ஏ., எம்பி, பதவிகளுக்காகப் போட்டியிடுவது வாரிசு அரசியல் ஆகாது. கட்சியின் தலைவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பது தான் வாரிசு அரசியலாகும் என்றார்.

மேலும்,  எதிர்க்கட்சிகள், எதிரணியில் இருப்பவர்கள் கூட எங்களின் மூத்த தலைவர்களை பாராட்டுகிறார்கள் என்றால் வரவேற்கிறோம். ஆனால், அதற்கும் வாக்குகளுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்ல என்றவர்,  தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என குற்றம் சாட்டியவர், திமுக கொடுத்த   520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார்  என்றும் குற்றம் சாட்டினார்.

 நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன் என்று கூறியவர், தமிழக மக்களிடையே அதிமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும், நடைபெற உள்ள தேர்தலில்,  தமிழகத்தில் 35 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.