ஸ்ரீகாந்த்

முகப்பில் இருப்பவர், … ஒருகாலத்தில் மிகப் பிரல நடிகராக விளங்கிய ஸ்ரீகாந்த்தான்.

தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கதுரை உட்பல பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். ரஜினி, கமல் ஆகியோருடனும் நடித்தார். சவுகார் ஜானகியுடன் அவர் பாடி நடித்த “அடுத்து அம்புஜத்தை பார்த்தேளா” பாடல் மறக்க முடியாதது.

ஒரு கட்டத்தில் திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீகாந்துடன் செஃல்பி எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா…

அவரிடம் ஸ்ரீகாந்த் பற்றி கேட்டோம்.

அதற்கு எஸ்.வி.சேகர், “ஸ்ரீகாந்த் எங்களது குடும்ப நண்பர். எனக்கு பத்து, பன்னிரண்டு வயது இருக்கும் போது என் பெற்ரோர் இலங்கையில் இருந்தார்கள். அப்போது சென்னை வீட்டில் நான், சித்தப்பா, பாட்டி ஆகியோர் இருந்தோம். அந்த காலகட்டத்தில் பேச்சிலராக இருந்த ஸ்ரீகாந்த் எங்கள் வீட்டில்தான் ஒருவருடம் தங்கியிருந்தார்.

அப்போது அவர் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்தார். சிறுவனான எனக்கு அமெரிக்க பென்சில், ரப்பர் எல்லாம் தருவார். அப்போது அவர் கே.பாலசந்தரின் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். என்னையும் அந்த நாடகங்களுக்கு அழைத்துச் செல்வார்.

சமீபகாலமாக அவர் திரையுலகில் இருந்து விலகியிருந்தபோதும் எங்களுக்குள் தொடர்பு இருந்தது. கொஞ்சம் உடல் நலமின்றி இருந்தார். அவ்வப்போது அவரை சென்று பார்த்து பேசி வருவேன்.

1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிற வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.  ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முககிய கதாரபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்தார்.

அவரை பலரும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எனஅறு மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சிவாஜி கணேசனுடன் தங்கப்பதக்கம் திரைப்படத்தில்..

இவர் கதாநாயகனாக நடித்து வெளியான திக்கற்ற பார்வதி படம் 1974 ம் வருடம் சிறந்த தமிழ்த்திரைப்படம் என்று தேசிய விருது பெற்றது.

எஸ்.வி.சேகர் – ஸ்ரீகாந்த் – அவரது மனைவி

கடந்த ஒன்றாம் தேதி எண்பது வயது நிறைவடைந்தது. இதையொட்டி அவருக்கு சதாபிசேக  விழா நடந்தது. நெருங்கிய சிலரை மட்டும் அழைத்திருந்தார். அப்போது எடுத்தபடத்தைத்தான் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன்” என்று மலரும் நினைவுகளோடு சொல்லி முடித்தார் எஸ்.வி.சேகர்.