சென்னை:

ல்வேறு பிரச்சினைகளை கடந்து நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. படத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துக்களை விஜய் பேசியுள்ளதால் இந்த படம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, டாஸ்மாக் வரி போன்றவை குறித்து விஜய் பேசும் காட்சிக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், படத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் பாகுபலிக்கு அடுத்ததாக மெர்சல் படத்தின் வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே அதிகமான வசூலை பெற்ற இரண்டாவடு படம் மெர்சல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படம்  உலகம் முழுவதும் வெளியான நிலையில், மத்திய அரசுக்கு எதிரான  விமர்சனங்களால் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டு வெளியான படங்களில் மெர்சல் படத்தின்  முதல் நாள் வசூல் ரூ. 31.50 கோடி என்றும், இது இந்தியாவில் மட்டும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர மற்ற நாடுகளில்  ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது.

ஒட்டு மொத்தமாக படம் வெளியான  முதல் நாளிலேயே  மெர்சல் படம் மொத்தமாக ரூ. 43.50 கோடியை வசூலை குவித்துள்ளது. ஏற்கனவே வசூலில் முதல் இடத்தில் பாகுபலி உள்ளது. அதையடுத்து  இரண்டாவது இடத்தை தற்போது மெர்சல் கைப்பற்றி உள்ளது.