‘ஸ்கர்ட்ஸ்’அணிய வேண்டாம் டெல்லி அமைச்சரின் சர்ச்சை கருத்து!

Must read

 
புதுடெல்லி:
ந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ‘ஸ்கர்ட்ஸ்’ அணிய வேண்டாம் என்று டெல்லி மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி மாநில மந்திரி மகேஷ் சர்மா
டெல்லி மாநில மந்திரி மகேஷ் சர்மா

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு உதவுவதற்காக 1363 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு வந்ததும், அவர்களுக்கு ”வெல்கமிங் கிட்” ஒன்று வழங்கப்படும் அதில், இந்தியாவில் இருக்கும் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவை  பட்டியலிட்டு அதன் விபரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும் என்றார்.
இந்த பரிந்துரைகளில், இரவு நேரங்களில் சிறிய நகரங்களில் வெளி நாட்டினர் தனியாக சுற்ற வேண்டாம்.  ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகள் அணிய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தாங்கள் பயணிக்கும் கார்களின் எண்களை புகைப்படம் எடுத்து தங்கள் நண்பர்களுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.
உலகமெங்கும் ஆடை குறித்த கருத்து மிகவும் சர்ச்சை ஆகி கொண்டி ருக்கிறது. பிரான்ஸில் முஸ்லீம் பெண்கள் கடற்கரையில் நீச்சல் உடை தான் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
அதுபோன்று தற்போது இந்தியாவின் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article