சென்னை

மது அலுவலக ரீதியான கடிதத்தை அரசியல் சர்ச்சை ஆக்க வேண்டாம் என தமிழக அரசு தலைமைச் செயலர் இறையன்பு கூறி உள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்  குறித்து ஆளுநருக்குத் தெரிவிக்கும் வகையில் அதன் தரவுகளைச் சேகரித்து வைக்க வேண்டும், எனத் தலைமைச் செயலர் இறையன்பு அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஒறு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.  இது அரசியல் உலகில் சர்ச்சையானது.

இது குறித்த் தமிழக அரசின் தலைமை செயலர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,, “நான் அலுவலக ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறி உள்ளதாக அறிந்தேன்.   தமிழகத்துக்குப் புதிதாக ஆளுநர் பொறுப்பேற்றுள்ளதால் அவருக்குத் தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டி வரலாம்.

எனவே அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக்  கொள்ளுமாறு நான் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அலுவலக ரீதியாக ஒரு கடிதம் எழுதி உள்ளேன்.  இவ்வாறு திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல் திரட்ட அறிவுறுத்துவது வழக்கமான ஒன்றாகும்.  அதை அரசியல் பொருள்கொண்ட சர்ச்சையாக மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.