வெளிநாட்டவருக்கு வேலை கொடுக்காதே! டிரம்ப் எச்சரிக்கை

Must read

இன்டியானா,
வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்க வேலை கொடுக்காதே என்று அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பை  வழங்கும்,  அமெரிக்க நிறுவனங்கள் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.
டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவின் பொருளாதாரம் முதல் அனைத்து துறைகளும் ஏது நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளது. அரது அதிரடி பேச்சால் உயர்அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இதன் காரணமாக புதுப்புது பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க சிஐஏ தலைவர் டிரம்புக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
trump2
இதற்கிடையில் அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில்  உள்ள கேரியர் நிறுவனத்தில் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது,  கேரியர் நிறுவனம் வெளிநாட்டிற்கு வழங்கி வந்த சுமார் ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பை உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அதை  பாராட்டிய டிர ம்பத்  அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்நாட்டு தொழில்நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார். கேரியர் நிறுவனத்தை  முன்மாதிரியாகக் கொண்டு பிற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அமெரிக்காவில் தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு சலுகைகளை நடைமுறைப் படுத்த உள்ளதாகவும், அதே நேரத்தில் வெளிநாட்டில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள் பொருட்களை இறக்குமதி செய்ய வரிவிதிப்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இறுதியில்,  தேர்தலில் தான் வெற்றி பெற உதவியாக இருந்த இன்டியானா வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article